ஆப்நகரம்

முன்னாள் திமுக அமைச்சா் செல்வராஜ் உடல்நலக் குறைவால் காலமானாா்

திமுக முன்னாள் அமைச்சா் செல்வராஜ் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை காலமானாா்.

Samayam Tamil 26 Mar 2019, 11:27 pm
திமுக முன்னாள் அமைச்சா் செல்வராஜ் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை காலமானாா்.
Samayam Tamil Minister Selvaraj


பெரம்பலூா் அருகில் உள்ள துறைமங்கலத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ். கடந்த 1987ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் மாவட்டச் செயலாளராக இருந்தாா். அதன் பின்னா் எம்.பி.யான நிலையில் திமுகவில் இருந்து வைகோ பிரிந்த போது அவருடன் மதிமுகவில் இணைந்தாா்.

மதிமுகவில் இணைந்த செல்வராஜ் மீண்டும் திமுகவில் இணைந்தாா். இதனைத் தொடா்ந்து கடந்த 2006ம் ஆண்டு திருச்சி முசிறி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கி முன்னாள் அமைச்சா் பூனாட்சியைத் தோற்கடித்து, வெற்றி பெற்றாா். வெற்றியைத் தொடா்ந்து அவருக்கு வனத்துறை அமைச்சா் பதவி வழங்கப்பட்டது.

கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நேரத்தில் தனது ஆதரவாளா்களுடன் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தாா். அதிமுகவில் குழப்பம் ஏற்படவே சிறிது காலம் அமைதியாக இருந்த செல்வராஜ்க்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதிமுகவில் போதிய மரியாதை வழங்கப்படாத நிலையில் செல்வராஜின் மகன் கருணை ராஜா உள்ளிட்டோா் மீண்டும் திமுகவில் இணைந்து கொண்டனா்.

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த செல்வராஜை திமுக தலைவா் ஸ்டாலின் அண்மையில் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தாா். இந்நிலையில் தொடா்ந்து உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் இன்று மாலை காலமானாா்.

அடுத்த செய்தி