ஆப்நகரம்

மேட்டுப்பாளையத்தில் விவசாயி தற்கொலை

கோவை மேட்டுப்பாளையத்தில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து, விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 16 Apr 2016, 9:28 pm
கோவை மேட்டுப்பாளையத்தில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து, விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil farmer suicide in mettupalayam
மேட்டுப்பாளையத்தில் விவசாயி தற்கொலை


அங்குள்ள தேவாங்குபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி (62). இவர் தனக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தின் ஒருபகுதியில் பசுமைக் குடில் அமைத்து விவசாயம் செய்து வந்தார். இதற்காக தேசிய தோட்டக்கலை துறை மூலம் 50% மானியத்துக்கு விண்ணப்பித்திருந்தார். இந்த மானியம் கிடைக்கும் நம்பிக்கையில், கோவை சரவணம்பட்டியில் உள்ள வங்கியில் ரூ.70 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.

இந்த தொகையை வைத்து, ராமசாமி 75 சென்ட் நிலத்தில் பசுமைக் குடில் போட்டு காய்கறிகள் பயிர் செய்து வந்திருக்கிறார். இந்தமுறை பசுமைக் குடிலில் போதுமான விளைச்சல் கிடைக்காததால், நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், விண்ணப்பித்து நீண்ட நாள் ஆகியும், மானியத் தொகை அவருக்கு வந்து சேரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் கடன் தொகை முழுவதையும் ராமசாமி கட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தவணைக் கட்டமுடியாமல் சிரமப்பட்ட ராமசாமி, மனம் உடைந்து பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி, தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி