ஆப்நகரம்

கீழடியில் மறைந்து கிடக்கும் தமிழனின் ரகசியம்; 4ஆம் கட்ட அகழாய்வுக்கு விவசாயிகள் எதிர்ப்பு!

கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 4 Mar 2018, 8:16 am
திருப்புவனம்: கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil farmers opposed against keezhadi 4th step of excavation
கீழடியில் மறைந்து கிடக்கும் தமிழனின் ரகசியம்; 4ஆம் கட்ட அகழாய்வுக்கு விவசாயிகள் எதிர்ப்பு!


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த பள்ளிசந்தைபுதூர் பகுதியில், கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றன.

முதல்கட்ட ஆய்வில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய மண் பானை ஓடுகள், ஆயுதங்கள் உள்ளிட்ட சுமார் 6,000 பொருட்கள் கிடைத்தன. இதையடுத்து 2016-17ஆம் ஆண்டுகளில் 2வது, 3வது கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றன.

இதன்மூலம் வைகை ஆற்றின் கரையில் தமிழர்கள் நகரங்கள் அமைத்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இதையடுத்து கீழடியில் தொடர்ந்து ஆய்வுகள் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் 4ஆம் கட்ட அகழாய்வு நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு தொல்லியல் துறை உதவி இயக்குநர் சக்திவேல் தலைமையிலான குழு, கீழடி பள்ளிசந்தைபுதூர் பகுதியில் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு வந்த விவசாயிகள் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கீழடி அகழாய்வு பணிகளால் விவசாயம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.

மேலும் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, விவசாயிகளை சமாதானப்படுத்தினர்.

Farmers opposed against Keezhadi 4th step of excavation.

அடுத்த செய்தி