ஆப்நகரம்

ஆற்று நீரில் மூழ்கிய தந்தை, மகன்; துணிச்சல் வீரர்கள் செய்த சாகசம்- பரபரப்பு வீடியோ!

தீயணைப்புத் துறையினர் செய்த சாகசத்தால் தந்தை, மகன் இருவரும் ஆற்றில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Samayam Tamil 4 Aug 2019, 1:04 pm
ஈரோடு மாவட்டம் பழைய பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி(40). இவரது நான்காம் வகுப்பு படிக்கும் மகன் கிருஷ்ணன்(9). இவர்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த பட்லூருக்கு ஆடிப் பெருக்கை கொண்டாட சென்றிருந்தனர்.
Samayam Tamil Namakkal Boy Rescued


அங்கு பாயும் காவிரி ஆற்றில் நேற்று பிற்பகல் இருவரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதைக் கண்ட அங்கு பணியில் ஈடுபட்டிருந்த திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய வீரர் மோகன், உடனே மீட்பு பணியில் இறங்கினார்.

Also Read: செல்போன் பார்த்தவாறு அரசு பஸ் இயக்கிய ஓட்டுநர் சஸ்பெண்ட்!!

தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துவிட்டு, தானே களத்தில் இறங்கத் தொடங்கினார். காவிரி ஆற்றில் குதித்து 200 மீட்டர் தூரத்திற்கு கயிறு கூட இல்லாமல் நீந்திச் சென்றார்.

இருவரையும் மீட்க கடுமையாக போராடினார். இறுதியாக தந்தை, மகனை மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார். மயக்க நிலையில் இருந்த இருவருக்கும் முதலுதவி சிகிச்சைகள் அளித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read: உயிரை பணயம் வைத்து திருட வந்தா இப்படியா பண்றது? திருடனின் உருக்கமான கடிதம்!


அதற்குள் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் துணிச்சலாக செயல்பட்டு தந்தை, மகனை மீட்ட தீயணைப்பு வீரருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

Also Read: ரூ. 3,676 கோடியை பயன்படுத்தாமல் மத்திய அரசுக்கு திருப்பிக் கொடுத்த தமிழக அரசு!

அடுத்த செய்தி