ஆப்நகரம்

திடீர் திருப்பம்.! பிரதமர் மோடியை சந்திக்கிறார் ஃபாத்திமா தந்தை லத்தீப்...

சென்னை ஐஐடி மாணவி தற்கொலை தொடர்பாக விசாரணையி நடந்து வருகிறது. இந்நிலையில் மாணவியின் தந்தை பிரதமரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 27 Nov 2019, 8:27 pm
சென்னை ஐஐடியில் எம்.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்த கேரள மாணவி ஃபாத்திமா லத்தீப் கடந்த 9 ஆம் தேதி விடுதி அறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Samayam Tamil திடீர் திருப்பம்.! பிரதமர் மோடியை சந்திக்கிறார் ஃபாத்திமா தந்தை லத்தீப்...


இவரது மரணத்தில் முக்கிய ஆதாரமாக இருப்பது அவர் செல்போனில் பதிவு செய்யயப்பட்டிருந்த தற்கொலை கடிதம் மட்டுமே. அந்த செல்போனை கைப்பற்றிய போலீசார் ஆய்வு செய்வதற்காக சென்னையிலுள்ள தடவியல் துறை அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளனர்.

பாத்திமா தற்கொலை குறித்த முதற்கட்ட விசாரணையில் பாத்திமா சமீபத்தில் நடந்த இன்டெர்னல் தேர்வில் ஒரு பாடத்தில் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததாகவும், ஆகையால் தற்கொலை செய்வதற்கு கடைசி நாள் வரை அவர் யாரிடமும் பேசாமல் அழுது கொண்டிருந்ததாகவும் தெரிந்தது.

ஆனால் அவரது தந்தை சந்தேகித்தபடி பாத்திமாவின் செல்போனில் இருந்த ஆதாரம் மர்மத்தை கிளப்பியது. அதில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேராசிரியர்கள் ஹேமச்சந்திரன், சுதர்சன் பத்பநாபன், மிலிந்த் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

2 நிமிட வாசிப்பில் இன்றைய செய்திகள் - 27.11.19

ஏற்கெனவே தமிழக முதல்வரை சந்தித்து தனது மகள் தற்கொலைக்கு நீதி வேண்டும் என அப்துல் லத்தீப் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் வரும் திங்களன்று அவர் பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளார். பேராசியர்களை விசாரித்து வரும் போலீசார் இதுவரை எவ்வித தகவலையும் தெரிவிக்கவில்லை.

இதனால் தற்கொலைக்கான மர்ம முடிச்சு அவிழ்க்கப்படாமலேயே உள்ளது. எனது மகள் மரணத்திற்கு சரியான நியாயம் கிடைக்கும் என தமிழக காவல் துறையையும், அரசையும் நான் நம்புகிறேன் என்று கூறிய லத்தீப், பிரதமரை சந்திக்க இருப்பது நம்பிக்கை சரிந்து விட்டதா என்று நினைக்க வைக்கிறது.

அடுத்த செய்தி