ஆப்நகரம்

பிப்ரவரி 20: தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்..! மாவட்ட வாரியாக

தமிழகத்தில் இன்றைய (20-02-2021) கொரோனா நிலவரத்தை மாவட்ட வாரியாக பாப்போம்.

Samayam Tamil 20 Feb 2021, 9:27 pm
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 438 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,47,823 ஆக அதிகரித்துள்ளது. இது நீங்கலாக இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் மொத்தம் 31 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 20 பேருக்கும் உருமாறிய வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil file pic


மாநிலத்தில் தற்போது 4,120 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 139 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 234191 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 228460 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 4137 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 47 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55415 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 54328 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 679 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 408 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

செங்கல்பட்டில் இன்று 41 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52406 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 51241 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 777 பேர் பலியாகியுள்ளனர்.


பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதுவரை இங்கு 2281 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2254 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 6 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் 7 ஆயிரம் வாக்குச் சாவடிகள் பதற்றமானவை - தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

அதுபோல, அரியலூரில் இன்று இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இங்கு 4722 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் தற்போது 11 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 50,893 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,67,55,951 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 459 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 8,31,246 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 12,457 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி