ஆப்நகரம்

மீண்டும் உயர்த்தப்பட்ட பால் விலை- தமிழக மக்களுக்கு ஷாக்கிங் நியூஸ்!

தனியார் பால் நிறுவனங்கள் பல்வேறு பால் பொருட்களின் விலையை அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

Samayam Tamil 25 Feb 2020, 12:44 pm
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் என்று அழைக்கப்படும் ஆவின் தமிழ்நாடு அரசின் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இதன் கீழ் பால், தயிர் உள்ளிட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றின் விலையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த சூழலில் கடந்த ஜனவரி மாதம் ஆரோக்கியா, திருமலா, டோட்லா, ஜெர்ஸி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் பால் பொருட்களின் விலையை உயர்த்தின.
Samayam Tamil Milk


இதனைத் தொடர்ந்து கடந்த 21ஆம் தேதி ஹெரிடேஜ் நிறுவனம் பால் விலையை உயர்த்தியது. இந்நிலையில் ஜெர்ஸி, டோட்லா ஆகிய நிறுவனங்கள் பால் பொருட்களின் விலையை மீண்டும் உயர்த்தி நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

அதன்படி பால் விலை லிட்டருக்கு 2 ரூபாயும், தயிர் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளன. ஆரோக்கியா நிறுவனம் உயர்த்தியுள்ள பால் விலை நிலவரம் குறித்து இங்கே காணலாம்.

ஆரோக்கியா நிறுவனம்:

* பால் விலை - லிட்டருக்கு 2 ரூபாய் உயர்வு
* தயிர் விலை - லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வு

ஆரோக்கியா புல் க்ரீம் பால்:

* பழைய விலை - ரூ.62
* புதிய விலை - ரூ.64

ஆரோக்கியா ஸ்டேண்டர்டு பால்:

* பழைய விலை - ரூ.52
* புதிய விலை - ரூ.54

ஆரோக்கியா டோனுடு பால்:

* பழைய விலை - ரூ.48
* புதிய விலை - ரூ.50

ஆரோக்கியா தயிர்:

* பழைய விலை - ரூ.60
* புதிய விலை - ரூ.64

தூத்துக்குடியில் நடிகர் ரஜினி இன்று ஆஜராகவில்லை; அவருக்குப் பதிலாக இவர்...!

இதேபோல் திருமலா நிறுவனமும் பால் பொருட்களுக்கு ரூ.4 வரை விலையை உயர்த்தியுள்ளது. இதன் முழு விவரத்தை இங்கே காணலாம்.

திருமலா டோனுடு பால்:

* பழைய விலை - ரூ.46
* புதிய விலை - ரூ.50

திருமலா கோல்ட் பால்:

* பழைய விலை - ரூ.52
* புதிய விலை - ரூ.56

திருமலா புல் க்ரீம் பால்:

* பழைய விலை - ரூ.60
* புதிய விலை - ரூ.64

திருமலா தயிர்:

* பழைய விலை - ரூ.58
* புதிய விலை - ரூ.62

இதற்கு பால் கொள்முதல் விலை உயர்வே காரணம் என்று ஆரோக்கியா, திருமலா நிறுவனங்கள் கூறுகின்றன. விரைவில் கோடைகாலம் வரவுள்ளது. அந்த சமயத்தில் ஐஸ்கிரீம் மற்றும் நெய் ஆகியவற்றின் தேவை அதிகம் இருக்கும்.

இதையொட்டி செயற்கையான விலை ஏற்றத்தை உண்டாக்கி இருப்பதாக பால் முகவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எப்படி இருந்தாலும் பால் விலை உயர்வு தமிழக மக்களுக்கு வருத்தமான செய்தியாக தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

அடுத்த செய்தி