ஆப்நகரம்

அம்மா அம்மா நீ எங்க அம்மா: ஓ.பி.எஸ்., உண்ணாவிரத மேடையில் சினிமா பாடல்

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நடத்தும் உண்ணாவிரதப் போராட்ட மேடையில், பெற்ற தாயை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சினிமா பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.

TNN 8 Mar 2017, 11:02 am
சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நடத்தும் உண்ணாவிரதப் போராட்ட மேடையில், பெற்ற தாயை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சினிமா பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.
Samayam Tamil film songs broadcasting in the dias of ops hunger strike
அம்மா அம்மா நீ எங்க அம்மா: ஓ.பி.எஸ்., உண்ணாவிரத மேடையில் சினிமா பாடல்


மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர், அது தொடர்பாக நீதி விசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தக் கோரி தமிழகம் மற்றும் புதுவை உள்பட சுமார் 36 இடங்களில் ஓ.பன்னீ்ர்செல்வம் அணியினர் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.

அந்தந்த மாவட்டங்களில் அந்தந்த மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அதிமுக-வின் மூத்த தலைவர் மதுசூதனன் தலைமையில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், பி.எச்.பாண்டியன், பொன்னையன் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்ட மேடையில், பெற்ற தாயை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சினிமா பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.

பிச்சைக்காரன் திரைப்படத்தில் இருந்து, நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா..., வேலை இல்லா பட்டதாரி படத்தில் இருந்து அம்மா அம்மா நீ எங்க அம்மா...,ஆகிய பாடல்கள் ஓபிஎஸ் உண்ணாவிரதப் போராட்டத்தில் தொடர்ச்சியாக ஒலிபரப்பப்படுகின்றது.
Film songs Broadcasting in the dias of OPS hunger strike

அடுத்த செய்தி