ஆப்நகரம்

முடிவுக்கு வரும் பிரச்சாரம்; வேலூரில் அனல் பறக்கும் தேர்தல் களம்!

தேர்தல் பிரச்சாரம் விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், வேலூரில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Samayam Tamil 2 Aug 2019, 11:07 am
பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கு, வரும் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை 9ஆம் தேதி நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
Samayam Tamil MK Stalin Vellore Campaign


இந்த தேர்தலில் ஏற்கனவே வேட்பாளர்களாக களமிறங்கிய அதிமுக கூட்டணி சார்பில் ஏசி சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றனர். நாளை மாலையுடன் பிரச்சாரம் முடிவுக்கு வரவுள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

Also Read: ரூபாய் நோட்டுகளில் சாவித்ரி படம்! விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை

அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை 5 மணிக்கு அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியிலும், மாலை 6 மணிக்கு வேலூர் சட்டமன்ற தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

Also Read: தமிழகத்தில் விழிபிதுங்கும் தேர்தல் பிஸினஸ்; தானே ஆப்பு வைத்துக் கொள்ளும் பிரசாந்த் கிஷோர்!

இதேபோல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து, அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4 மணிக்கு குடியாத்த சட்டமன்ற தொகுதியிலும், வேலூர் பொதுக் கூட்டத்திலும் கலந்து கொள்கிறார்.

Also Read: குஜால் மூடில் அன்புமணி ராமதாஸ்! எதற்காகத் தெரியுமா?

இந்தப் பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்களான கே.எஸ்.அழகிரி, வைகோ, காதர் மொய்தீன், திருமாவளவன், ஜவாஹிருல்லா, முத்தரசன் உள்ளிட்டோரும் ஒரே மேடையில் பங்கேற்கின்றனர்.

அடுத்த செய்தி