ஆப்நகரம்

Chennai High Court: திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்க டிவி தொடர்கள் காரணமா..? உயர்நீதிமன்றம் கேள்வி...!

சென்னை: முறையற்ற உறவுகள் அதிகரிக்க டிவி சீரியல்களும், திரைப்படங்களும் தான் காரணமா? கள்ளக்காதல் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க டிவி சீரியல்கள், சினிமாக்களில் காட்சிகள் அமைக்கப்படுகின்றனவா? என உயர்நீதிமன்றம் கேள்வி

Samayam Tamil 7 Mar 2019, 11:27 am
நாட்டில் திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்க தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடர்கள் தான் காரணமா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
Samayam Tamil கள்ளக்காதல் விவகாரம் குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சராமாரி கேள்வி


கடந்த 2017ம் ஆண்டில், சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவர் திருமணத்தை மீறி ஏற்பட்ட உறவு காரணமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அஜித் குமார், தன் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், திருமணத்தை மீறிய உறவுகளினால் ஏற்படும் குற்றங்களில் ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலம் முதலிடத்தில் இருப்பதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

திருமணத்தை தாண்டிய உறவுகள் சமூகத்திற்கு தீங்கானது என்று கூறிய நீதிபதிகள், இதுபோன்ற முறையற்ற உறவுகளால் ஏற்படும் குற்றங்களை குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர்.

அதன்படி, திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்க தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் தான் காரணமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுபோன்ற உறவுகளில் ஈடுபடுவோர் குற்றச் செயல்கள் செய்யும் விதமாக டிவி சிரீயல்கள், திரைப்படங்களில் காட்சிகள் அமைக்கப்படுகின்றனவா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சுதந்திரம் காரணமாக கணவனோ, மனைவியோ திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகளை வைத்துக்கொள்கிறார்களா? என வினவிய நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து மத்திய, மாநில அரசுகள் ஜூன் 21ம், தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி