ஆப்நகரம்

ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 7, 324 காவல்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ்!

சரியான காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத 7 ஆயிரத்து 324 காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 6 Feb 2019, 12:39 pm
சரியான காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத 7 ஆயிரத்து 324 காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil cep4igs_chennai-police_pti-_625x300_18_July_18


சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணையின் போதுநீதிபதி எம்.வி.முரளிதரன், தமிழகம் முழுவதும் கடந்த 2009 ஆம் ஆண்டு 2014 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் குறிப்பிட்ட காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் முடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை எத்தனை என்பது குறித்த புள்ளி விவரங்களைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடந்து, தமிழகம் முழுவதும் உள்ள கிளை நீதிமன்றங்களில் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை சுமார் 2 லட்சத்து 14 ஆயிரத்து 901 வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக தலைமைப் பதிவாளர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக உள்துறைச் செயலாளர் மற்றும் தமிழக காவல்துறை டிஜிபி ஆகியோர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக காவல்துறை டிஜிபி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, உரிய காலத்துக்குள் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யாத 7 ஆயிரத்து 324 காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி