ஆப்நகரம்

தொடரும் கோவில் தீவிபத்துகள்; இம்முறை கும்பகோணம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கருவறை!

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கருவறையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 22 Feb 2018, 6:40 pm
கும்பகோணம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கருவறையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil fire accident in kumbakonam meenakshi sundareswarar temple
தொடரும் கோவில் தீவிபத்துகள்; இம்முறை கும்பகோணம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கருவறை!


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சத்திரம்கருப்பூர் மெயின் ரோட்டில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கார்த்திகை நட்சத்திரம் நிகழ்வு என்பதால், மூலவர் சுந்தரேஸ்வரருக்கும், மீனாட்சி அம்பாளுக்கும் அபிஷேகங்கள் செய்து, அலங்காரம் செய்யப்பட்டது.

பின்னர் 12 மணியளவில் கருவறையில் தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து 12.30 மணியளவில் திடீரென புகை வெளியேறியுள்ளது. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் பூஜை பொருட்கள், பீரோவில் இருந்த சுவாமி, அம்பாளுக்கு சாத்தப்படும் 50 சேலைகள், 30 வேட்டிகள், எலக்ட்ராணிக் மங்கள வாத்தியம் உள்ளிட்ட 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

இந்த சம்பவம் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Fire accident in Kumbakonam Meenakshi Sundareswarar Temple.

அடுத்த செய்தி