ஆப்நகரம்

மதுரையில் 2,000 ஆண்டுகள் பழமையான 4 ஐம்பொன் சிலைகள் திருட்டு

அதிகாலை வந்து நடையைத் திறந்த அர்ச்சகர், வல்லப பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, சீனிவாசர் ஆகிய நான்கு கடவுளர்களின் சிலைகளையும் காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.

Samayam Tamil 14 Oct 2018, 6:41 pm
மதுரை கோயிலில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இருந்து 4 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டுள்ளன.
Samayam Tamil 1539515628839.


மதுரை சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் ஸ்ரீ குருபகவான் சன்னதி மிகவும் பிரசித்திபெற்றது. இந்தக் கோவிலுக்கு இன்று அதிகாலை வந்து நடையைத் திறந்த அர்ச்சகர், வல்லப பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, சீனிவாசர் ஆகிய நான்கு கடவுளர்களின் சிலைகளையும் காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.

உடனனே போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர்.

கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில் நள்ளிரவு 12.30 மணிக்கு முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் சிலைகளை திருடுவது தெரிந்துள்ளது.

திருடப்பட்ட 4 சுவாமி சிலைகளும் ஐம்பொன் சிலைகள் ஆகும். அவை சுமார் 2000 ஆண்டுகள் பழமையானவை என்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடையவை என்றும் கணிக்கப்படுகிறது.

அடுத்த செய்தி