ஆப்நகரம்

ஆளுநரை சந்தித்த அமைச்சர்கள்: இதுதான் காரணம்!

ஆளுநருடன் தமிழக அமைச்சர்கள் ஐந்து பேர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

Samayam Tamil 20 Oct 2020, 12:43 pm
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநருடன் அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
Samayam Tamil Tamil Nadu Governor


சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், ஜெயக்குமார், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றியது.

மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: சென்னைக்கு கனமழை!

இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில், இதுவரை ஆளுநர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆளுநர் முடிவு தெரிந்த பிறகு மருத்துவ சேர்க்கை நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் ஆளுநர் விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும் என அமைச்சர்கள் நேரில் வலியுறுத்துவதற்காக சென்றுள்ளனர்.

சிஏஏவை அமல்படுத்தியே தீர்வோம்: மீண்டும் கிளம்புமா போராட்டம்?

முன்னதாக நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் ஆளுநர் விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அடுத்த செய்தி