ஆப்நகரம்

கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையச் சேர்ந்த மன்சூர் அலி- சர்மிளா தம்பதியினரின், ஐந்து வயது மகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி நேற்று பரிதாபமாக உயிரிழந்தாள்!

Samayam Tamil 25 Sep 2019, 2:30 pm
கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளான 5 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி உயிரிழப்பு!
கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி உயிரிழப்பு!


திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே நாராயணசாமி காலனியில், மன்சூர் அலி- சர்மிளா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் ரம்ஜான் பாத்திமா என்ற பெண் குழந்தை இருந்தது.

சிறுமி ரம்ஜானுக்கு கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் இருந்து வந்தது. இதையடுத்து சிறுமியை அவரது பெற்றோர், அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் காய்ச்சல் குறைந்தபாடில்லை.

தமிழகத்தை நெரிக்கும் டெங்கு.. அரசின் அலட்சியமே காரணம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு!

இந்நிலையில், கடந்த 18-ம் தேதி சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து அவரது பெற்றோர் உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் ரம்ஜானை சேர்த்தனர்.

அங்கு சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மருத்துவர்கள் ரம்ஜானை சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

சென்னையில் டெங்கு: இரு குழந்தைகள் பலி!

ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி ரம்ஜான் நேற்று பரிதாபமாக உயிரிழந்தாள்.

ஏற்கெனவே சென்னை மதுரவாயலைச் சேர்ந்த 8 வயது ரோகித், முகப்பேர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 6 வயது மகாலட்சுமி ஆகிய குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தனர்.

எனவே மேலும் உயிர் பலியாகமல் இருக்க உடனடியாக டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இடைவிடாத இருமலை இல்லாமல் செய்துவிடுவோம்

அடுத்த செய்தி