ஆப்நகரம்

Cauvery Flood Alert: காவிரியில் வெள்ள அபாயம்: தமிழக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை!

கனமழை காரணமாக கர்நாடகவில் உள்ள கபிணி, கேஆர்எஸ், ஹேமாவதி அணைகள் நிரம்பி வழிந்துள்ள நிலையில், தமிழகத்தில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Aug 2018, 5:56 pm
கனமழை காரணமாக கர்நாடகவில் உள்ள கபிணி, கேஆர்எஸ், ஹேமாவதி அணைகள் நிரம்பி வழிந்துள்ள நிலையில், தமிழகத்தில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil cauvery water


கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் அணைத்தும் நிரம்பி வழிந்து வருகிறது. குறிப்பாக ஹேமாவதி, காரங்கி, கபிணி, கிருஷ்ணசாகர் அணைகள் அடுத்த 36 மணி நேரத்தில் முழு கொள்ளவை எட்டி நிரம்பி வழியும் என்று மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது.


மேலும், கர்நாடக அணையலிருந்து திறக்கப்பட்ட ஒரு லட்சம் கனஅடி நீரானது அடுத்த இரண்டு நாட்களுக்குள்ளாக தமிழகத்துக்கு வரும் என்பதால், வெள்ள அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது. கபிணி அணையிலிருந்து மட்டும் 70,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 27 வருடங்களுக்குப் பிறகு இவ்வளவு அதிகமான நீர் திறக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும்.


இதனால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும் தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும் மத்திய நீர்வள ஆணையம் அறிவுத்தியுள்ளது.

அடுத்த செய்தி