ஆப்நகரம்

பிரதமரை விமர்சித்து பாடல் பாடிய கோவன் நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பு!!

Samayam Tamil 14 Apr 2018, 2:57 am
திருச்சி: இந்தியப் பிரதமர் மோடியயை விமர்சனம் செய்து பாடல் பாடியதாக கைது செய்யப்பட்ட நாட்டுப்புறப் பாடகர் கோவன், நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil பிரதமரை விமர்சித்து பாடல் பாடிய கோவன் நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பு!!
பிரதமரை விமர்சித்து பாடல் பாடிய கோவன் நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பு!!


மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த பாடகர் கோவன், சாதிய அடக்குமுறை, அரச பயங்கரவாதம், மணல் கொள்ளை, கனிம வள கொள்ளை உள்ளிட்ட பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு எதிராக பாடல்கள் எழுதி பாடியுள்ளார்.

சமீபத்தில் ரத யாத்திரை, மேலாண்மை வாரியம் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பாடல் ஒன்றை வெளியிட்டார். அதில் பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிச்சாமியை விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் திருச்சி கே.கே.நகர் காவல் நிலைய போலீசார் கோவனை நேற்று அவரது வீட்டில் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நீதிபதி நிபந்தனை ஜாமீனில் விடுவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டு டாஸ்மாக்கிற்கு எதிராக பாடல் பாடியதற்காக, தேசத் துரோக வழக்கில் கோவன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி