ஆப்நகரம்

ரேஷன் அட்டை தாரர்களுக்கு வரும் சர்ப்ரைஸ்: அமைச்சர் அறிவிப்பு!

ரேஷன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை, உளுந்து ஆகியவை விரைவில் வழங்கப்படும் என்று உணவுத் துறைஅமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 21 May 2022, 11:48 am
தமிழகம் முழுவதும் 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள 3 ஆயிரம் ரேஷன் கடைகளை இரண்டாகப் பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ration shops


விழுப்புரம் மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் நேற்று ஆய்வுப்பணி நடைபெற்றது. அப்போது, காணை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம், காணைகுப்பத்தில் திறந்தவெளி நெல்சேகரிப்பு மையம், பெரும்பாக்கத்தில் நியாயவிலைக் கடை ஆகியவற்றை உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் உடனிருந்தனர்.

இதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, “தமிழகம் முழுவதும் 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள 3 ஆயிரம் ரேஷன் கடைகளை இரண்டாகப் பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Omicron BA.4 தமிழ்நாட்டில் பிஏ 4 வகை பாதிப்பு: ஊரடங்கு அறிவிப்பு வெளியாகுமா?அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 68 பகுதிநேர புதிய ரேஷன் கடைகள் வரும் ஜூலை மாதத்துக்குள் திறக்கப்படும். தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் ரேஷன் கடைகள் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. இந்தக் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் புதிய அட்டை வழங்கப்பட்டு வருகின்றன. உணவுப் பொருள் வழங்கல்துறையில், முதல்வர் உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் ரூ.2,600 கோடி சேமிக்கப்பட்டுள்ளது” என்றார்.

அன்புமணிக்கு முடிசூட தயாரான ராமதாஸ்: பாமகவில் நடக்கும் அதிரடி மாற்றம்!

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, “ரேஷன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை, உளுந்து ஆகியவை விரைவில் வழங்கப்படும். பயோ மெட்ரிக் திட்டம் முழுமையாக நிறைவேற்றப் படவில்லை. கண் கருவிழி மூலம் அடையாளம் காணும் முறை விரைவில் தமிழகம் முழுவதும் கொண்டு வரப்படும். இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான காலி இடங்களில் கூரை அமைக்கப்பட்டு அங்கு நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும்” என்று கூறினார்.

அடுத்த செய்தி