ஆப்நகரம்

தீபாவளி: வீட்டில் பலகாரம் செய்பவர்கள் 'லைசன்ஸ்' வைத்திருக்க வேண்டும்..!!

விற்பனை செய்வதற்காக வீடுகளில் பலகார பொருட்கள் செய்பவர்கள் அதற்கான உரிமம் பெற வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை வலியுறுத்தியுள்ளது.

Samayam Tamil 22 Oct 2019, 7:36 pm
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை சூடு பிடித்துள்ளது. பட்டாசு வெடித்து, பலகாரம் செய்து தீபாவளியை கொண்டாட மக்கள் வழக்கம் போல தயாராகி வருகின்றனர். இந்நிலையில் விற்பனை செய்வதற்காக வீடுகளில் செய்யப்படும் பலகார பொருட்களுக்கு முன் கூட்டியே உரிமம் பெற வேண்டும் என கோவை உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil 7


சீன பட்டாசு தடை: தமிழக விற்பனையாளர்களுக்கு சுங்கத்துறை விடும் எச்சரிக்கை..

தீபாவளி பண்டிகையை கொண்டாடுபவர்கள், தங்களது வீடுகளில் பலகாரம் செய்வது வழக்கம். சிலர் வெளியில் வாங்கி வந்தும் பலகாரத்தை அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களுக்கு வழங்குவர். இப்படி பலகாரத்தை விற்பனை செய்யும் பல்வேறு குழுவினர்கள் உரிமத்திற்காக கோவை உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து வருகின்றனர்.

2 நிமிட வாசிப்பில் இன்றைய செய்திகள் - 22.10.19

இது குறித்து கோவை உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கூறுகையில், விற்பனைக்காக பலகாரம் செய்பவர்கள், கைகைளில் கையுறைகள், முகத்தில் மாஸ்க் மற்றும் தலை உரை ஆகியவற்றை உடுத்திக்கொண்டு, சுத்தமான முறையில் இருக்க வேண்டும்.

இதற்காக விண்ணப்பிப்பவர்கள், மருத்துவ சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். பலகாரங்களை தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்களை முறையான உரிமம் பெற்றுள்ள வெண்டாரிடம் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். தயாரிக்கப்படும் பொருட்கள் சுகாதார முறையில் இருக்க வேண்டும். சுவைக்காகவும், நிறத்திற்காகவும் அதிகப்படியான செயற்கை மூலப்பொருட்களை தின்பண்டங்களில் சேர்க்க கூடாது என இவ்வாறு கூறினார்.

ரஜினி கட்சி ஆரம்பிக்க மாட்டார்; பாஜகவிலும் சேர மாட்டார்: கே.எஸ் அழகிரி ஆருடம்

இந்த உரிமத்திற்கு விண்ணப்பிக்க '' food safety and standards authority of india '' என்ற இணையதளம் மூலமாக தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

அடுத்த செய்தி