ஆப்நகரம்

தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலுக்கு சம்மன்!

தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலுக்கு ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.

TNN & Agencies 26 Dec 2017, 9:00 pm
சென்னை: தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலுக்கு ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.
Samayam Tamil for vetrivel arumugaswami commission summons dinakaran supporters
தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலுக்கு சம்மன்!


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார். அதன் பின் அவரது மரணத்தில் சந்தேகங்கள் எழுந்தன.

இதையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக புகார் அளித்தவர்களிடம் அந்த கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.

சசிகலா, ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த அப்பல்லோ மருத்துவர்கள் ஆகியோருக்கு ஆறுமுகசாமி சம்மன் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்ட டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான வெற்றிவேலுவுக்கு ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.

சிகிச்சை வீடியோ தொடர்பாக 10 நாட்களுக்குள் விசாரணை ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆறுமுகசாமி கமிஷன் உத்தரவிட்டுள்ளது.


தவிர, ஜெயலலிதா உடல்நலம் குறித்து அமைச்சர்கள் ஆலோசித்தது உட்பட பல வீடியோக்கள் இருப்பதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் வெற்றிவேலுக்கு விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.

For vetrivel Arumugaswami Commission summons dinakaran supporters!

அடுத்த செய்தி