ஆப்நகரம்

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உதவியாளர் கைது: அடுத்த குறி யார்?

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 4 Mar 2023, 10:28 am
அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக பணியாற்றிய சி.விஜயபாஸ்கரின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil c vijayabaskar ravi


அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் ரவி கைது செய்யப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டையைச் சேர்ந்த முத்துலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பன்முகத் தன்மையை மீட்டெடுக்க வேண்டியது அவசியம்: கனிமொழி பேச்சு!
முத்துலட்சுமி அளித்த புகாரில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஹனிபா என்ற தரகர் ஆசைவார்த்தை கூறினார். தரகர் ஹனிபா மற்றும் ஓட்டுநர் விஜய் ஆகிய இருவர் மூலம் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர் ரவி என்பவரின் அறிமுகம் கிடைத்தது என்றும் ரவி, அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி தன்னிடம் ரூ. 11 லட்சம் பணம் வாங்கிக்கொண்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலக ஊழியர் ரவி, தனக்கு பல துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களைத் தெரியும் என்பதால் எந்த துறையில் வேண்டுமானாலும் வேலை வாங்கித் தருவதாக கூறினார் என்றும், ஆனால், ரூ. 11 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு அரசுப் பணி பெற்றுத் தராமல் மோசடி செய்துவிட்டதாகவும், பணத்தை திருப்பிக் கேட்டதற்கு மிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளித்துள்ளார் முத்துலட்சுமி.
சென்னை மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடக்கம்: முடிவுக்கு வந்த 20 மணி நேர பாதிப்பு!
இந்த புகாரை தொடர்ந்து ரவி, விஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள், மாஜி அமைச்சர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்றும் விசாரித்து வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி