ஆப்நகரம்

Karunanidhi Statue Live Video : கருணாநிதி சிலை திறப்பு விழா

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி சிலை திறப்பு விழா இன்று கோலாகலமாக திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.

Samayam Tamil 16 Dec 2018, 6:07 pm
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி சிலை திறப்பு விழா இன்று கோலாகலமாக திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி, சோனியா காந்தி, கேரளா முதல்வா் பினராயி விஜயன், ஆந்திரா முதல்வா் சந்திரபாபு நாயுடு, புதுவை முதல்வா் நாராணசாமி ஆகியோா் கலந்து கொண்டனா்.
Samayam Tamil karunanidhi 1


மூன்று மாநில முதல்வா்கள், காங்கிரஸ் தலைவா்கள் உள்ளிட்ட அகில இந்திய தலைவா்கள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவா் சோனியா காந்தி கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தாா்.

மேலும் சிலை திறப்பு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளா் வைகோ, கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, நடிகா்கள் ரஜினிகாந்த், பிரபு, வடிவேலு, நாசா், கவிஞா் வைரமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.





கருணாநிதி சிலையை திறந்து வைத்தாா் சோனியா காந்தி

அடுத்த செய்தி