ஆப்நகரம்

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா!

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

Samayam Tamil 6 May 2021, 11:47 pm
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவி வருகிறது. கொரோனா முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
Samayam Tamil விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்


பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, படுக்கைவசதி பற்றாக்குறை நிலவுகிறது என்று குற்றம்சாட்டப்படுகிறது. தடுப்பூசி போடும் பணியை மத்திய, மாநில அரசுகள் விரைவு படுத்தியுள்ளன. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், கொரோனாவின் தாக்கம் குறைந்த பாடில்லை. அரசு அதிகாரிகள், முன்களப் பணியார்கள், தூய்மை பணியாளர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ஆக்சிஜன் நிலவரம்.. அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை!

அந்த வகையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தொற்று உறுதியானதும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி