ஆப்நகரம்

மண் சோறு சாப்பிட்ட கோகுல இந்திரா, வளர்மதி, சி.ஆர். சரஸ்வதி

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, பா.வளர்மதி, சி.ஆர் சரஸ்வதி உள்ளிட்ட ஏராளமானோர் மண்சோறு சாப்பிட்டு பிராத்தனை செய்தனர்.

TNN 4 Oct 2016, 10:40 pm
சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, பா.வளர்மதி, சி.ஆர் சரஸ்வதி உள்ளிட்ட ஏராளமானோர் மண்சோறு சாப்பிட்டு பிராத்தனை செய்தனர்.
Samayam Tamil former lady ministers eating sand rice prayer
மண் சோறு சாப்பிட்ட கோகுல இந்திரா, வளர்மதி, சி.ஆர். சரஸ்வதி


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 22 ஆம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 13 நாட்களாக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவும், அவரின் ஆயுள் அதிகரிக்கவும் வேண்டி அதிமுக தொண்டர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கோயில்களில் சிறப்பு பூஜை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே வடசென்னை தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் கஸ்தூரி எம்.சி., தலைமையில் சைதாப்பேட்டை ஸ்ரீ பிடாரி இளங்காளியம்மன் கோவிலில் மண்சோறு சாப்பிடும் வேண்டுதலில் முன்னாள் அமைச்சரும் இலக்கிய அணி செயலாளருமான பா.வளர்மதி, முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுலஇந்திரா, கழக செய்தி தொடர்பு உறுப்பினர் சி.ஆர்.சரஸ்வதி உளிட்ட அதிமுக மகளிர் அணி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

சைதாபேட்டையில் உள்ள இளங்காளியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். ஆண்டு தோறும் அக்னி சட்டி எடுத்து வழிபடுவார் வளர்மதி. இந்த நிலையில் ஜெயலலிதா நலம்பெற மண்சோறு சாப்பிட்டுள்ளார். நேர்த்திக்கடன் செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வளர்மதி, முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என கூறினார்.

அடுத்த செய்தி