ஆப்நகரம்

முன்னாள் மேயர் கொலை வழக்கு: திமுக பெண் பிரமுகரின் மகன் கைது?

திருநெல்வேலி மாவட்ட முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திமுக பெண் பிரமுகரின் மகன் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 29 Jul 2019, 8:47 am
திமுக முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கடந்த 23ம் தேதி கொலை செய்யப்பட்ட நிலையில், திமுக பெண் பிரமுகரின் மகன் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Samayam Tamil Uma Maheshwari


திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் பெண் மேயராக திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி கடந்த 1996ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், உமா மகேஸ்வரி, அவரது கணவர், வீட்டு பணிப்பெண் ஆகிய மூவர் கடந்த 23ம் தேதி வீட்டில் படுகொலை செய்யப்பட்டனர். முன்னாள் மேயர் ஒருவர் வீட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read: மேயர் கொலையில் துப்பு கிடைக்காமல் விழிப்பிதுங்கும் நெல்லை காவல்துறை

இந்த வழக்குத் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த கொலை விவகாரத்தில் திமுக ஆதிதிராவிர் நலப்பிரிவு மாநில துணைச்செயலாளரான சீனியம்மாளின் மகனை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபரிடம் ரகசிய இடத்தி வைத்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Also Read: ஸ்டாலின் ராசியால் தான் கர்நாடக அரசு கவிழ்ந்தது- போட்டுத் தாக்கிய பழனிசாமி!

ஏற்கனவே சீனியம்மாளிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், தனக்கும், இந்த கொலைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்திருந்தார். பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி