ஆப்நகரம்

நன்றி மறந்த செந்தில் பாலாஜி: கடுப்பான முதலமைச்சர் பழனிசாமி!

வீரகனூர்: பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Samayam Tamil 15 Dec 2018, 2:49 am
சேலம் மாவட்டம் வீரகனூர் பகுதியில் ரூ.131 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
Samayam Tamil CM Palaniswami


இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், விவசாயிகளின் முக்கிய தேவையான நீர் ஆதாரத்தை உருவாக்கும் வகையில், நடப்பாண்டில் ரூ.378 கோடி மதிப்பில் குடிமராமத்து திட்டம் 1,511 ஏரிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் 800 ஏக்கர் பரப்பளவில் உலகத் தரத்திலான கால்நடை ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்படும். இதில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு உள்ளிட்ட உயர் தர கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு செய்து தரப்படும்.

கெங்கவல்லி அருகே பொன்காளியம்மன் ஓடை பகுதியில் ரூ.27 கோடி மதிப்பில் புதிய ஏரி உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வானிலை ஆராய்ச்சி மையம் அளித்த தகவலின் படி, புதிய புயலால் அதிக சேதாரம் இருக்காது.

சில மாவட்டங்களில் கனமழை இருக்கும். அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். சுயநல சக்திகள் மாற்றுக் கட்சிக்கு சென்றிருக்கின்றனர். உண்மை விசுவாசிகள், தொண்டர்கள் அதிமுகவில் இருக்கின்றனர்.

அதிமுகவில் அமைச்சர் என்ற அந்தஸ்துடன் மக்களுக்கு அடையாளம் காணப்பட்ட செந்தில்பாலாஜி, நன்றி மறந்துவிட்டதாக முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

அடுத்த செய்தி