ஆப்நகரம்

வேலூர்: அரசு பள்ளிக்கு பொதுமக்கள் மேளதாளத்துடன் வந்து கல்வி சீர் வரிசை!

வேலூரில் தொய்வடைந்த பள்ளியை நவீனமயமாக்கும் வகையில், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் இணைந்து 50 ஆயிரம் ரூபாய்க்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.

Samayam Tamil 28 Feb 2019, 6:40 pm
வேலூரில் தொய்வடைந்த பள்ளியை நவீனமயமாக்கும் வகையில், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் இணைந்து 50 ஆயிரம் ரூபாய்க்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.
Samayam Tamil வேலூர்: அரசு பள்ளிக்கு பொதுமக்கள் மேளதாளத்துடன்  வந்து கல்வி சீர் வரிசை!
வேலூர்: அரசு பள்ளிக்கு பொதுமக்கள் மேளதாளத்துடன் வந்து கல்வி சீர் வரிசை!

வேலூர் மாவட்டம், கந்திலி அருகே கோடியூர் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது இந்த பள்ளிக்கு இன்று பொதுமக்கள் மேளதாளங்கள் பொதுமக்களே மேஜை நாற்காலிகள் நோட்டு புத்தகங்கள் சாப்பீஸ்கள் உள்ளிட்டவைகளை சீர் வரிசையாக எடுத்து வந்தனர். மேலும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை ஊர்வலமாக எடுத்து பூ பழம் வெற்றிலை பாக்கு வைத்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்கள். இதில் திரளான மாணவர்கள் பெற்றோர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். இது போன்று பின் தங்கிய அரசு பள்ளிகளுக்குஉதவி செய்ய அரசு மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் முன் வர வேண்டும் என்றும் தொடர்ந்து அரசு பள்ளி ஆசிரியர் தங்கள் குழந்தைகளையும் அரசு பள்ளியிலேயே சேர்த்து பெருமை சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி