ஆப்நகரம்

பேருந்துக் கட்டண உயர்வை உடனே ரத்துசெய்யுங்கள்: முன்னாள் அமைச்சர்

தமிழக அரசின் பேருந்துக் கட்டண உயர்வை உடனே ரத்துசெய்ய வேண்டும் என்று முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 20 Jan 2018, 11:32 am
கோவை: தமிழக அரசின் பேருந்துக் கட்டண உயர்வை உடனே ரத்துசெய்ய வேண்டும் என்று முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil former transport minister senthil balaji has requested to withdraw the bus fare hike immediately
பேருந்துக் கட்டண உயர்வை உடனே ரத்துசெய்யுங்கள்: முன்னாள் அமைச்சர்


தமிழகம் முழுவதும் இன்று முதல் பேருந்துக்கட்டண உயர்வு அமலாகியுள்ளது. இதன் மூலம் சாதாரண பேருந்துகளுக்கான கட்டணம் ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துகளுக்கான அதிகபட்சக் கட்டணம் ரூ.12ல் இருந்து ரூ.19ஆக உயர்கிறது. விரைவுப் பேருந்துகளுக்கான கட்டணம் 30கி.மீ.,க்கு ரூ.17ல் இருந்து ரூ.24ஆக உயர்த்தப்படுகிறது.

மாற்றியமைக்கப்பட்ட பேருந்து கட்டணம், தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்குப் பின்பும் அண்டை மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவாக இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பேருந்துக் கட்டண உயர்வை தமிழக அரசு உடனே ரத்துசெய்ய வேண்டும். தினமும் பேருந்தைப் பயன்படுத்தும் 2 கோடி பொதுமக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்று முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அடுத்த செய்தி