ஆப்நகரம்

பிரச்சினைகளை கடந்து 5 ஆண்டுகளுக்கு பின்னா் வந்த காவிாி நீா்

நாகை மாவட்டத்தின் கடைமடைப் பகுதியான தாணிக்கோட்டகம் சட்ரஸிக்கு ஐந்தாண்டுகளுக்குப் பின் வந்த காவிரி நீரை விவசாயிகள் நெல்மணிகள் கலந்த மலர்களைத் தூவி வரவேற்றனர்.

toi 12 Oct 2017, 7:18 pm
நாகை மாவட்டத்தின் கடைமடைப் பகுதியான தாணிக்கோட்டகம் சட்ரஸிக்கு ஐந்தாண்டுகளுக்குப் பின் வந்த காவிரி நீரை விவசாயிகள் நெல்மணிகள் கலந்த மலர்களைத் தூவி வரவேற்றனர்.
Samayam Tamil formers gave a warm welcome to cauvery river
பிரச்சினைகளை கடந்து 5 ஆண்டுகளுக்கு பின்னா் வந்த காவிாி நீா்


வேதாரண்யம் தாலுகாவில் தாணிக்கோட்டகம், தலைஞாயிறு, கரியாப்பட்டினம், வடமலை, மணக்காடு, மூலக்கரை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 14 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா சாகுபடி நடைபெற்றுவருகிறது. காவிாி நீரை நம்பி ஆற்றுப் பாசனத்தால்தான் இந்தச் சாகுபடி எப்போதும் நடைபெறும்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக காவிரிநீர் கடைமடைப்பகுதியான இங்கு வந்து சேராததால் மழைநீரை நம்பி நேரடி நெல் விதைப்பு சாகுபடி செய்தனர். மழையும் பொய்துப் போனதால் அதை நம்பி விவசாயம் செய்த விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

இந்த ஆண்டு மேட்டூரில் போதுமான தண்ணீர் இருப்பில் இருப்பதால் எப்படியும் காவிரியில் தண்ணீர் வரும் என்று எதிர்பார்த்து சமீபத்தில் அவ்வப்போது பெய்த மழையை வைத்து நேரடி நெல் விதைப்புச் செய்துள்ளனர். ஒருபோக சம்பா சாகுபடி நல்லபடியாகச் செய்திடலாம் என்ற நம்பிக்கையோடும் இருக்கின்றனர்.

இதுபற்றி விவசாயிகளிடம் பேசியபோது, ''காவிரியின் கிளை வாய்க்கால்களைத் தூர்வாராததால் தண்ணீர் வருவது தடைப்படும் சூழ்நிலை உள்ளது. ஐந்து அடி வரை இந்த சட்ரஸில் நீரைத் தேக்கி வைக்கமுடியும். அப்போதுதான் அது பாசனத்துக்குப் பயன்படும். தற்போது அரை அடி தண்ணீரே உள்ளது. இங்கு தண்ணீர் வரும் என்பதையே மறந்துவிட்ட பொதுப்பணித் துறையினர், எவ்வித முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை.

இனியாவது அவர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டுகிறோம். காவிரியில் முறைவைக்காமல் தண்ணீர் திறந்துவிட்டால் எங்கள் பகுதிக்கு நிச்சயம் தண்ணீர் வந்துசேரும். அதைக்கொண்டு இந்த ஆண்டாவது சம்பா சாகுபடிச் செய்து விவசாயத்தையும் வாழவைப்போம் நாங்களும் வாழ்வோம். அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.

அடுத்த செய்தி