ஆப்நகரம்

காட்பாடி அருகே இன்றும் 4 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்!

வேலூர் மாவட்டம், கரசமங்கலம் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 4 டன் செம்மரக்கட்டைகளை இன்று பறிமுதல் செய்தனர்.

Samayam Tamil 12 Feb 2019, 4:14 pm
வேலூர் மாவட்டம், கரசமங்கலம் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 4 டன் செம்மரக்கட்டைகளை இன்று பறிமுதல் செய்தனர்.
Samayam Tamil காட்பாடி அருகே இன்றும் 4 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்!
காட்பாடி அருகே தொடர்ந்து இன்றும் 4 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்!


வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் அமானுல்லா. இவர் ஆந்திராவிலிருந்து செம்மரக் கட்டைகளை கட்த்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக அமானுல்லாவின் தாய் நூர்ஜகான், இலத்தேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து அமானுல்லா வீட்டில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைக்கிருந்த 10 டன் செம்மரக்கட்டைகள், லாரி, இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அமானுல்லா உள்பட ஐந்து பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அதே பகுதியில் மற்றொரு வீட்டின் மாடியில் மேலும் 4 டன் செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்து. அதனையும் பறிமுதல் செய்த போலீசார் குற்றவாளிகளை காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் ஆண்கள் சிறையில் அடைத்தனர்.

கரசமங்கலம் பகுதியில், இரு நாட்களில் 14 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செம்மர கடத்தலில் ஈடுபட்ட மகனை போலீசாரிடம் மாட்டிவிட்ட தாய்!

அடுத்த செய்தி