ஆப்நகரம்

முடக்கப்பட்ட முரசொலி இணையதளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது

முடக்கப்பட்ட திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் இணையதளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

TNN 20 Mar 2017, 9:45 am
சென்னை: முடக்கப்பட்ட திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் இணையதளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
Samayam Tamil freezed murasoli website works again
முடக்கப்பட்ட முரசொலி இணையதளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது


திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலி. இதன் இணையதளம் இன்று காலை முடக்கப்பட்டது. லிஜியன் குழும ஹேக்கர்களால் அந்த இணையதளம் முடக்கப்பட்டிருந்தது. அதில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தடை செய்ய வேண்டும் எனவும், ஜனநாயகத்தை காத்திட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

உத்தரப்பிரதேசத்தில் வாக்குச்சீட்டு மூலம் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும். நாட்டைக் காக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு தடை தேவை எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், முடக்கப்பட்ட திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் இணையதளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், தொழிலதிபர் விஜய் மல்லையா உள்ளிட்டவர்களின் டுவிட்டர் கணக்கை லிஜியன் ஏற்கனவே முடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Freezed Murasoli website works again

அடுத்த செய்தி