ஆப்நகரம்

கெயில் விவகாரம்: அதிமுக அரசுக்கு கருணாநிதி கேள்வி

கெயில் விவகாரத்தில் அதிமுக அரசு என்ன செய்ய போகிறது என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

TNN 24 Jul 2016, 8:21 pm
சென்னை: கெயில் விவகாரத்தில் அதிமுக அரசு என்ன செய்ய போகிறது என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil gail issue karunanidhi asks question to admk govt
கெயில் விவகாரம்: அதிமுக அரசுக்கு கருணாநிதி கேள்வி


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: 24-7-2016 அன்று காலையில் “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேட்டில் நாம் அதிர்ச்சியடையத் தக்க வகையில் ஒரு செய்தி வந்திருந்தது. அதாவது தமிழகத்தில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த விவசாயிகளின் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில், மத்திய அரசு “கெயில் பைப்லைன்” திட்டத்திற்கு மாற்று வழி காண வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்காது என்பது தான் அந்தச் செய்தி.

திமுக-வை பொறுத்தவரையில் கெயில் நிறுவனம் குழாய்களைப் பதிப்பதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் அந்தக் குழாய்கள் விளை நிலங்களையும், விவசாயிகளையும் பாதிக்காமல் பதிக்கப்பட வேண்டுமென்று தொடக்கத்திலிருந்து கூறி வருகிறோம்.

கெயில்” பைப்லைன் பிரச்சினையில் அதிமுக அரசு என்ன செய்யப் போகிறது? Read: https://t.co/zUQPzcsgVE — KalaignarKarunanidhi (@kalaignar89) July 24, 2016 ஆனால், ஒரு வாரத்திற்கு முன்பு, மத்திய அரசின் பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் கூறும்போது, மத்திய அரசு இந்தப் பிரச்சினை பற்றி கெயில் நிறுவனத்துடன் ஆலோசித்த போது, தமிழக அரசும், விவசாயிகளும் விரும்புவதைப் போல நெடுஞ்சாலைகள் வழியாக உயர் அழுத்தக் குழாய்களைப் பதிப்பது சாத்திய மில்லாத ஒன்று என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது, மேற்கு மண்டல விவசாயிகளிடையே பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விவசாயிகளின் அச்சத்தைப் போக்க தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்றும் தெரியவில்லை. மத்திய அரசும், குறிப்பாக பிரதமர் மோடி அவர்களும் தமிழ்நாட்டிற்கு மிகவும் துணையாக இருப்பதாக பேசியுள்ள தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, விவசாயிகளின் முக்கியமான இந்தப் பிரச்சினை குறித்து உடனடியாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி