ஆப்நகரம்

பொறித்த சிக்கன் போல காட்சியளிக்கும் தமிழக அரசு கொடுத்த நிவாரண அரிசி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதிக்கு தமிழக அரசு வழங்கியுள்ள நிவாரண அரிசி, பொதுமக்களிடையே அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 20 Nov 2018, 2:12 am
கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதிக்கு தமிழக அரசு வழங்கியுள்ள நிவாரண அரிசி, பொதுமக்களிடையே அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil gaja cyclone_4


வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த கஜா புயல், தீவிர புயலாக உருமாறி மணிக்கு 120 கி.மீ வேகத்தில் வீசியது. பிறகு கடற்பகுதியிலிருந்து மெல்ல நகர்ந்து நாகப்பட்டினர் - வேதாரண்யம் இடையே கரையை கடந்தது.

தீவிரபுயலாகவே கஜா கரையை கடந்ததால், தரைப்பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டது. மனித உயிரிழப்புகள் 40-யை தாண்டியது. ஏராளமான விலங்கினங்கள், பறவைகள், மரங்கள், வயல்கள் அனைத்தும் புயலில் சிக்கி நாசமானது.

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினர் புதுக்கோட்டை ஆகியவை கஜா புயலால் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வர பொதுமக்களுக்கு பல ஆண்டுகள் ஆகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


ஏராளமானோர் வீடுகளை இழந்து தண்ணீருக்கும், உணவுக்கும் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட தற்போது வரை முழுமையாக சென்றடையவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்ப்பிணிப் பெண்கள், மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண்கள், அவர்களுக்கு உதவ முடியாத கையறு நிலையில் ஆண்கள் என டெல்டா மக்கள் பெரும் சிரமத்தில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே அமைக்கப்பட்டிருந்த கஜா புயல் நிவாரண முகாமில் சமைப்பதற்காக தமிழக அரசு வழங்கியுள்ள அரிசி, புழுத்துப் போய் கட்டிக் கட்டியாய் இருப்பதை பார்த்து முகாமில் தங்கியிருந்த மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

‘சோறுடைத்து பசி ஆற்றிய சோழ வளநாடு’ என போற்றப்பட்ட டெல்டா மக்களுக்கு இப்படி ஒரு நிலையா? என சமூகவலைதள வாசிகள் தமிழக அரசின் மீது முன்விமர்சனங்களை முன்வைத்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி