ஆப்நகரம்

Gaja Cyclone: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு.

Samayam Tamil 16 Nov 2018, 10:28 am
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Samayam Tamil cyc2
Gaja Cycolne: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு!


வங்கக்கடலில் உருவான கஜா புயல் இன்று அதிகாலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது.

இதனிடையே, இன்று காலை 9 மணியளவில் 100 முதல் 110 கி.மீட்டர் வேகத்தில் அதிராம்பட்டினத்தில் கஜா புயல் முழுவதுமாக கரையை கடந்தது. கஜா புயலின் பாதிப்புக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 9 பேர் பலியாகியுள்ளனர். தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் கஜா புயலால் 12 ஆயிரம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. நாகை மற்றும் வேதாரண்யம் பகுதிகளில் மரங்கள் முறிந்து மக்கள் தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அடுத்த செய்தி