ஆப்நகரம்

யானையின் தும்பிக்கையின் வடிவில் கஜா புயல்!

கஜா புயலின் மையப்பகுதி யானையின் தும்பிக்கைபோலவே தோன்றமளிப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளிட்ட புகைப்படத்தில் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 16 Nov 2018, 6:58 pm
கஜா புயலின் மையப்பகுதி யானையின் தும்பிக்கைபோலவே தோன்றமளிப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளிட்ட புகைப்படத்தில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil iyiy


பொதுவாக புயல் காற்று 61 கி.மீ வேகத்தில் வீசும்போது, அதற்கு பெயர் வைக்கப்படுகிறது. தெற்காசியாவைப் பொறுத்தவரையில் இந்தியா, பாகிஸ்தான், வங்களாதேசம், இலங்கை, மியான்மர், மாலத்தீவுகள், ஓமன் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளும் தலா 4 பெயர்களை பரிந்துரைக்கும். ஒவ்வொரு முறை புயல் தோன்றும்போதும், இந்தப் பெயர்கள் சுழற்சி முறையில் வழங்கப்படுகின்றன.


உதாரணமாக இதற்கு முன் ஒரிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைத் தாக்கிய ‘டிட்லி’ புயலின் பெயர் பாகிஸ்தானால் வழங்கப்பட்ட பெயர். இதற்கு பட்டாம்பூச்சி என்று அர்த்தம். தற்போது தமிழகத்தைத் தாக்க வரும் புயலுக்கு இலங்கை நாட்டினர் வழங்கிய கஜா என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், அடுத்த முறை புயல் ஒன்று உருவானால், அதற்கு தாய்லாந்து ‘பித்தாய்’ என்ற பெயர் வழங்க உள்ளது.

மேலும் கஜா என்றால் யானை பலம் என்ற அர்த்தம் உண்டு. இந்நிலையில்கஜா புயலின் மையப்பகுதி யானையின் தும்பிக்கைபோலவே காட்சியளிக்கிறது.இந்திய வானிலை ஆய்வு மையம் வெளிட்ட புகைப்படத்திலிருந்து இந்த தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த செய்தி