ஆப்நகரம்

ஓட்டலில் மேஜைகளாக மாறிய கஜா புயலில் சாய்ந்த தென்னை மரங்கள்!

திருவாரூர்: டீ கடைகள், ஓட்டல்களில் தென்னை மரங்களின் வெட்டப்பட்ட பகுதிகள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன.

Samayam Tamil 26 Dec 2018, 8:33 pm
கஜா புயல் பாதிப்பால் தமிழக டெல்டா மாவட்டங்கள் பலத்த சேதம் அடைந்தன. குடிசை மற்றும் ஓட்டு வீடுகளின் மேற்பகுதி காற்றில் பறந்தன. வயல்வெளிகள் பலத்த சேதம் கண்டன. ஏராளமான மரங்கள் சாய்ந்தன.
Samayam Tamil Gaja Stands


மின்கம்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன. டெல்டா பகுதி மக்கள் தங்கள் 20 ஆண்டுகால உழைப்பை இழந்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசும், தன்னார்வ குழுக்களும் செய்து வருகின்றன. சேதமடைந்த மின்கம்பங்கள் படிப்படியாக சரிசெய்யப்பட்டு வருகிறது.

இருப்பினும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக மிகுந்த மன வேதனையில் இருக்கின்றன. சாய்ந்து கிடக்கும் மரங்களை வெட்டி அகற்ற, இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

அவற்றின் உதவியால் மரங்கள் அகற்றப்பட்டு, சாலைகள், வயல்வெளிகள் சீரமைக்கப்பட்டன. இந்நிலையில் வெட்டி எடுக்கப்பட்ட தென்னை மரங்கள் டீ கடை, ஓட்டல்களில் பெஞ்சுகளாக மாறியுள்ளன. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அடுத்த செய்தி