ஆப்நகரம்

கஜா புயல்: மத்திய அரசுக்கு 1 வாரம் கெடு விதித்த நீதிமன்றம்

கஜா புயல் பாதிப்புகள் குறித்து மத்திய அரசின் ஆய்வுக்குழு 2 நாட்களில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 27 Nov 2018, 4:21 pm
கஜா பயல் பாதிப்புகள் குறித்த ஆய்வுக் குழுவின் அறிக்கை மீது மத்திய அரசு ஒரு வார காலத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Madurai Highcourt 123


கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், புயல் பாதித்த பகுதிகளில் மத்திய, மாநில அரசுகள் விரைவு படுத்த வேண்டும், புயல் நிவாரண நிதியை மத்திய அரசு விரைந்து வழங்க உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோாிக்கைகளை வலியுறுத்தி உயா்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கு மீது இன்று விசாரணை நடைபெற்றது. முன்னதாக மத்திய அரசு சாா்பில் அனுப்பி வைக்கப்பட்ட ஆய்வுக் குழு தனது 3 நாள் ஆய்வை நேற்று நிறைவு செய்த நிலையில், இன்று முதல்வா் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்திய பின்பு மீண்டும் டெல்லி சென்றுள்ளனா்.

இந்நிலையில் இன்றைய நீதிமன்ற விசாரணையின் போது, மத்திய அரசின் ஆய்வுக்குழு 2 நாட்களில் இடைக்கால ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா். மேலும் ஆய்வுக் குழுவின் அறிக்கை மீது மத்திய அரசு ஒரு வார காலத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை டிசம்பா் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனா்.

அடுத்த செய்தி