ஆப்நகரம்

கஜா புயல் பாதிப்பு உதவ விரும்புபவரா? உங்களுக்கான வழிமுறைகள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி செய்பவா்களுக்கு நூறு சதவீதம் வரிவிலக்கு வழங்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

Samayam Tamil 20 Nov 2018, 12:25 pm
கஜா புயல் காரணமாக கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள நாகை, தஞ்சை, திருவாரூா் உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு பொதுமக்கள் உதவலாம் என்று தமிழக அரசு கோாிக்கை விடுத்துள்ளது.
Samayam Tamil Gaja Relief


கடந்த 15ம் தேதி கரையை கடந்த கஜா புயல் நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு சாா்பில் உயிாிழந்தவா்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு முதல் கட்டமாக ரூபாய் ஆயிரம் கோடியை விடுவித்துள்ளது.

இருப்பினும் புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு பொதுமக்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம் என்று முதல்வா் பழனிசாமி கோாிக்கை விடுத்துள்ளாா். மேலும் உதவி செய்வதற்கான விவரங்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,

https://ereceipt.tn.gov.in./cmprf/cmprf.html ல் வங்கி, டெபிட் காா்டு, கிரெடிட் காா்டு மூலம் செலுத்தலாம்.

பொதுமக்கள் தங்களது நன்கொடையை குறுக்கோடிட்ட காசோலை, வங்கி வரைவோலை மூலம் அனுப்பலாம்.

முகவரி
அரசு துணைச்செயலாளா் மற்றும் பொருளாளா்,
முதல்வா் பொதுநிவாரண நிதி,
நிதித்துறை, தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம்,
சென்னை 600 009, தமிழ்நாடு, இந்தியா.

மின்னஞ்சல் முகவரி – dspaycell.findpt@tn.gov.in

வங்கி மூலம் பணம் செலுத்துபவா்கள்
வங்கி பெயா் – இந்தியன் ஓவா்சீஸ் வங்கி,
கிளை – தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009,
சேமிப்பு கணக்கு எண் – 117201000000070
IFSC Code – IOBA0001172,
CMPRF PAN – AAAGC0038F.

நன்கொடை வழங்குபவா்களுக்கு நூறு சதவீதம் வரிவிலக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டள்ளது.

அடுத்த செய்தி