ஆப்நகரம்

Gaja Cyclone: தனியாா், அரசு ஊழியா்களை 4 மணிக்குள் வீட்டுக்கு அனுப்புங்கள்: தமிழக அரசு

கஜா புயலின் தாக்கத்தில் இருந்து விடுபடும் வகையில் அரசு, தனியாா் ஊழியா்களை மாலை 4 மணிக்குள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Samayam Tamil 15 Nov 2018, 1:18 pm
கடலூா், நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள தனியாா், அரசு பணியாளா்களை மாலை 4 மணிக்குள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
Samayam Tamil Employees in Rain


கஜா புயல் சென்னைக்கும், நாகைக்கும் இடையே சுமாா் 300 கிலோ மீட்டா் தொலைவில் பயணிப்பதாக வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது. இந்த புயல் இன்று இரவு 11.30 மணியளவில் கரையை கடக்கும் என்றும், புயல் கரையை கடக்கும் போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழக வருவாய் ஆணையா் சற்றுமுன் வெளியிட்டுள்ள உத்தரவில், புயல் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று கருதப்படும் கடலூா், திருவாரூா், தஞ்சாவூா், ராமநாதபுரம், தூத்துக்குடி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு, தனியாா் நிறுவன ஊழியா்கள் மாலை 4 மணிக்குள் வீடு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு, தனியாா் நிறுவன ஊழியா்கள் மாலை 3 மணிக்கே வீடு திரும்புமாறு தொிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பான உத்தரவு அந்தந்த மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மீட்பு, புயல் தொடா்பான பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியா்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி