ஆப்நகரம்

சென்னையில் இன்று முதல் 4 நாட்களுக்கு விநாயகர் சிலைகள் ஊர்வலம்

இன்று முதல் நான்கு நாட்களுக்கு விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறவுள்ளது. இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

TNN 10 Sep 2016, 11:39 am
சென்னை: இன்று முதல் நான்கு நாட்களுக்கு விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறவுள்ளது. இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil ganesh idols rally starts for 4 days from today
சென்னையில் இன்று முதல் 4 நாட்களுக்கு விநாயகர் சிலைகள் ஊர்வலம்


விநாயகர் சதுர்த்தி தினம் கடந்த 5ம் தேதி கொண்டாடப்பட்டது. அன்று பல்வேறு அளவுகளில் விநாயகர் சிலைகளை வைத்து, பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். சிறப்பு பூஜைகள், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் கொண்டாடினர். இந்நிலையில் விநாயகர் சிலைகள் இன்று முதல் 4 நாட்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை கரைத்து வருகின்றனர். இந்து முன்னணி , இந்துமக்கள் கட்சி , சிவசேனா உள்ளிட்ட அமைப்புகள் நாளை ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பின் போது, போலீசார் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் தெரிவித்துள்ளனர்.

சிலைகளை கரைப்பதற்காக பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியிலும், நீலாங்கரை பல்கலை நகர் கடற்கரை பகுதியிலும், காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியிலும், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை மற்றும் கார்போரண்டம் யூனிவர்சல் கம்பெனியின் பின்புறம் உள்ள கடல் பகுதி மற்றும் எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் பகுதியிலும், கிரேன்கள் நிறுவப்பட்டு சிலைகளை கடலில் கரைக்க உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

35 அதிரடிப்படை பிரிவுகள் நகரின் முக்கிய பகுதிகளில் சட்டம்-ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் முன்னேற்பாடாக நிறுத்தப்பட்டுள்ளன. விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி 4 கூடுதல் கமிஷனர்கள், 6 இணை கமிஷனர்கள், 22 துணை கமிஷனர்கள், 60 உதவி கமிஷனர்கள் உள்பட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி