ஆப்நகரம்

மாமல்லபுரம் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு.!

தமிழக அரசின் விண்ணப்பத்தை ஏற்று, மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

TNN 15 Nov 2017, 10:03 am
தமிழக அரசின் விண்ணப்பத்தை ஏற்று, மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil geographic indications for mamallapuram sculptures
மாமல்லபுரம் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு.!


உலகில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறான பாரம்பரியங்கள், கலாச்சாரங்கள், கட்டட அமைப்புகள் என தனித்த அடையாளங்கள் இருக்கின்றன. டார்ஜிலிங் தேநீர், மைசூர் பட்டு, தமிழகத்தின் தஞ்சாவூர் ஓவியம், காஞ்சிபுரம் பட்டு ஆகியவைகளின் சிறப்பு மற்றும் பாரம்பரியத்தைக் கருதி அவற்றிற்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பொருட்களுக்கான புவிசார் குறியீடு பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 1999-ம் ஆண்டு இயற்றப்பட்டது. மத்திய அரசின் கீழ் செயல்படும், இதற்கான அலுவலகத்தின் தலைமையகம் சென்னை கிண்டியில் இருக்கிறது.

இந்த நிலையில் தமிழக அரசின் விண்ணப்பத்தை ஏற்று, மாமல்லபுரம் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனிமேல் மாமல்லபுரம் சிற்பங்கள் என்ற பெயரில், இனி யாருமே சிற்பம் வடிக்க முடியாது. மதுரை மல்லி, தஞ்சாவூர் ஓவியங்கள், காஞ்சிபுரம் பட்டு, ஆரணி பட்டு, சிறுமலை வாழை, கோவை வெட் கிரைண்டர் உட்பட 24 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி