ஆப்நகரம்

''அசையுது அசையுது''... வேலூர் வனப்பகுதியில் அனகோண்டாவா? திகிலூட்டும் கடைசி நொடி...

வேலூரில் உள்ள ஒரு வனப்பகுதியில் ராட்சத மலைப்பாம்பினை கண்ட சிலர் அனகோண்டா என கருதி வீடியோ வெளியிட்டுள்ளது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 4 Dec 2019, 6:09 pm
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அருகே அமைந்துள்ளது மோர்தானா அணை. வேலூர் மாவட்டத்தின் மிக பெரிய அணையாக விளங்கும் இதனை சுற்றி ஆந்திர மாநிலத்தின் புங்கனூர், பலமனேர், நாயக்கனேரி ஆகிய காடுகள் படர்ந்துள்ளன.
Samayam Tamil அசையுது அசையுது... வேலூர் வனப்பகுதியில் அனகோண்டாவா? திகிலூட்டும் கடைசி நொடி...




இந்த காடுகளில் பெய்து வரும் அதிக கனமழையால் மோர்தானா அணை வற்றாமல் காட்சியளிக்கும். தற்போது அம்மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த சமயத்தில் ராட்சத மலைப்பாம்பு ஒன்று குடியாத்தம் ஊர் எல்லையில் காணப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

பாதி உடம்பு தண்ணீருக்குள் இருக்க பாடை சுமக்கும் ஊர்... ஆண்டுகளாகத் தொடரும் அவலம்...

ஆடு மேய்த்து கொண்டிருந்த சிலர் மழை நீர் தேங்கியுள்ள சிறிய குட்டையில் ராட்ச பாம்பு இருந்ததை பார்த்துள்ளனர். உடனே அவர்கள் வைத்திருந்த செல்போனில் அதை வீடியோவும் எடுத்தனர்.

ராமநாதபுரத்தில் கடல் கொந்தளிப்பு, சீற்றம்; நடந்தது இதுதான்!!

சற்று நேரத்தில் ஆள் நடமாட்டத்தை சுதாரித்துக்கொண்ட அந்த ராட்சத பாம்பு அங்கிருந்து வேகமாக புறப்பட்டு செல்கிறது. இந்த சம்பவம் அறிந்து வனப்பகுதிக்கு விரைந்த வனத்துறையினர், அது மலை பாம்பு வகையை சேர்ந்ததுதான். அனகோண்டா என நினைத்து அஞ்ச வேண்டாம். ஆடு, மாடு மேய்ப்பதற்காக தனியாக யாரும் காட்டுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி