ஆப்நகரம்

பேனாவைகூட கடன் வாங்கி எழுதும் அளவுக்கு வறுமை: 1060 மதிப்பெண் எடுத்து மாணவி சாதனை!

பிளஸ் 2 தேர்வில் 1060 மதிப்பெண் பெற்ற மாணவி திவ்யா எழுதிய பேனாகூட மற்றவருடையது என்று அவர் கூறியுள்ளார்.

Samayam Tamil 17 May 2018, 6:42 pm
பிளஸ் 2 தேர்வில் 1060 மதிப்பெண்பெற்ற மாணவி திவ்யா எழுதிய பேனாகூட மற்றவருடையது என்று அவர் கூறியுள்ளார்.
Samayam Tamil 39565_thumb_13547


அரசுப் பள்ளியில் படித்தவா் மாணவி திவ்யா, இவர்பிளஸ் 2 தேர்வில் 1060 மதிப்பெண் பெற்றுள்ளார். மேலும் இவர் நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். இவரின் தந்தையும் தாயும் கூலி வேலை செய்கிறார்கள். எல்லா நாட்களிலும் இவர்களுக்கு வேலை கிடைக்காது. அப்படி வேலை கிடைக்கும் நாட்களில்கூட தொடர்ந்து 12 மணிநேரம் வேலை செய்யும் சூழ்நிலை ஏற்படும். மேலும் இவர்கள் வீட்டில் ஆறு பெண் குழந்தைகள், ஒரு பையன். இவர்கள் அனைவருக்கும் மூன்று வேளை உணவு கிடைப்பதே அதிசயம் என்கிறார் திவ்யா.

ஆனால் அப்படி இருக்கும்போதும் திவ்யாவின் தந்தை மற்றும் தாய் அனைவரையும் படிக்க வைத்துள்ளனர். இதுகுறித்து திவ்யா கூறுகையில் ’என்னை படிக்க வைக்க என் தாய் 18 மணி நேரம் உழைத்து பார்த்திருக்கிறேன். இதனால் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தேன். மேலும் வீட்டின் நிலையை புரிந்து, 10ம் வகுப்பு முடித்தவுடன் வீட்டு வேலைக்கு சென்றேன். அதில் கிடைத்த வருமானத்தை வைத்து, எனது தங்கைகள், மற்றும் தம்பிக்கு அடிப்படை பொருட்களை வாங்கிகொடுக்கிறேன். பள்ளி முடித்தபின் இரவு 7 மணி வரை வீட்டு வேலை செய்த பிறகு வீட்டுக்கு வருவேன். அதன் பிறகு 10 மணிவரை படிப்பேன் . மேலும் நாங்கள் இருக்கும் வீட்டில் ஒரு அறைதான். அதனால் இரவில் அதிக நேரம் படித்தால்,அவர்கள் தூக்கம் பாதிக்கப்படும் . மேலும் நான் எழுதிய பேனாகூட மற்றவர்களுடையது. என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி