ஆப்நகரம்

தொழிலாளர் விரோத போக்கில் தமிழக அரசு: உடனே மசோதாவை திரும்ப பெறுங்கள் - ஜி.கே.வாசன் வேண்டுகோள்!

தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி என்றால்தான் அவர்களின் உடல்நலனுக்கும் நல்லது, வேலையும் சுமுகமாக முடியும் என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 21 Apr 2023, 4:20 pm
12 மணி நேர வேலை சம்பந்தமாக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
Samayam Tamil gk vasan


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவையில் இன்று 12 மணி நேர வேலை சம்பந்தமாக மசோதா நிறைவேற்றப்பட்டது ஏற்புடையதல்ல. காரணம், தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி என்றால்தான் அவர்களின் உடல்நலனுக்கும் நல்லது, வேலையும் சுமுகமாக முடியும்.
கொட்டும் மழை ஒரு பக்கம், கொதிக்கும் வெயில் ஒரு பக்கம்: வானிலை ஆய்வு மைய அறிவிப்பு!அது மட்டுமல்ல 8 மணி நேர வேலை என்பதை உலக அளவில் தொழிலாளர்கள் போராடி பெற்றதால்தான் மே தினமே கொண்டாடப்படுகிறது. அதாவது தொழிலாளர்களின் வேலை, உழைப்பு, மன நலம் ஆகியவற்றிற்கு ஏற்ப வேலை நேரம் அமைய வேண்டும் என்பது தான் தொழிலாளர்களின் எண்ணமாகும்.

அப்படி இருக்கும் போது தொழிலாளர்களுக்கு எதிராக இம்மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியிருப்பது நியாயமற்றது. மேலும் பொது மக்களும் இந்த மசோதாவை எதிர்க்கின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சியினரையும் தாண்டி ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகளே இந்த மசோதாவை எதிர்ப்பது ஆட்சியாளர்களின் தொழிலாளர் விரோதப் போக்கை எடுத்துக்காட்டுகிறது.

மே தினம் வரும் வேளையில், தொழிலாளர்களின் நலன் காக்கும் வகையில் செய்தியை வெளியிட வேண்டுமே தவிர தொழிலாளர்களுக்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபடுவது தமிழக அரசுக்கு உகந்ததல்ல.
பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு: சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு!
எனவே தமிழக அரசு, 12 மணி நேர வேலை சம்பந்தமாக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி