ஆப்நகரம்

Go Back Amit Shah: ட்விட்டரில் களைகட்டும் ட்ரெண்ட் போர் - மல்லுக்கட்டும் பாஜகவினர்!

கோ பேக் அமித்ஷா, டிஎன் வெல்கம்ஸ் அமித்ஷா என இரண்டு ட்ரெண்டுகள்

Samayam Tamil 21 Nov 2020, 12:32 am

முன்னாள் பாஜக தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நாளை (நவம்பர் 21) தமிழகம் வரவிருக்கிறார். இந்த விசிட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அமித்ஷா அடிக்கல் நாட்டவிருக்கிறார்.
Samayam Tamil அமித்ஷா


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் வியூகம் மற்றும் கூட்டணி குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரை கூட்டணி தொடர்பான ஆலோசனைக்கு திட்டமில்லை என தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

ரஜினியுடன் அமித்ஷா சந்திப்பு?

தனது தமிழக விசிட் குறித்து அமித்ஷா ட்விட்டரில், “நாளை தமிழகத்திற்கான பல்வேறு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

வழக்கமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வரும்போது அவரது எதிர்ப்பாளர்கள் சார்பில் ‘Go Back Modi' என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டு இந்திய அளவில் முதலிடம் பிடிக்கப்படும். இது ஒவ்வொரு முறையும் தொடருவதைக் கண்ட பாஜகவினர் ‘TN Welcomes Modi' என ட்ரெண்ட் செய்து அதையும் முன்னணி ட்ரெண்டுகளில் கொண்டுவந்துவிடுவர்.

இந்த முறை அமித்ஷாவுக்கும் இதேபோன்ற ட்ரெண்ட் போர் தொடங்கியுள்ளது. நாளை அமித்ஷா தமிழகம் வரவுள்ள நிலையில் இப்போதே ட்விட்டரில் ‘Go Back Amit Shah' என்ற ட்ரெண்ட் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. மறுபுறம், பாஜகவினர் மற்றும் ஆதரவாளர்கள் சார்பில் தொடங்கப்பட்ட 'TN Welcomes Amit Shah' என்ற ட்ரெண்ட் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

அடுத்த செய்தி