ஆப்நகரம்

மதுரை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் வழங்க அரசாணை வெளியீடு!

முழு ஊரடங்கு காரணமாக மதுரையில் குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்குவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது

Samayam Tamil 25 Jun 2020, 6:24 pm
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், பரவை டவுன் பஞ்சாயத்து, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்குட்பட்ட அனைத்து கிராம பஞ்சாயத்து பகுதிகளிலும் இன்று முதல் வருகிற 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்த ஊரடங்கு சமயத்தில் ஏழை எளிய மக்ளின் சிரமங்களை குறைக்க, சென்னையில் வழங்கியதுபோல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் குடும்பத்திற்கு தலா 1,000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

மேலும், அதை செயல்படுத்தும் விதமாக, வருகிற 27.6.2020 முதல் சம்மந்தப்பட்ட துறையினர் அரிசி குடும்ப அட்டைதாரர்களின் இருப்பிடத்திற்கே சென்று, ரொக்க நிவாரணத்தை வழங்கவும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மக்களுக்கு ரூ.1,000 நிவாரணம்!

இந்த நிலையில், மதுரையில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் குடும்பத்திற்கு தலா 1,000 ரூபாய் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, 5 லட்சத்து 39 ஆயிரத்து 331 குடும்ப அட்டை தாரர்களுக்கு நிவாரணம் வழங்க, 53 கோடியே 93 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி