ஆப்நகரம்

பசும்பொன் முத்துராமலிங்கர் சிலையின் தங்க கவசத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..! ஏன்?

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை தங்க கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை தனியார் வங்கிக்கு கொண்டு செல்லபட்டது.

Samayam Tamil 2 Nov 2019, 1:17 pm
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவானது நடந்து முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் விழா நடைபெறும் நாட்களில் முத்துராமலிங்கர் சிலைக்கு தங்க கவசம் கொண்டு வரப்படும்.
Samayam Tamil 1


பின்பு விழா முடிந்ததும் கவசத்தை மதுரை தனியார் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்படும். அதேபோல கவசம், இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் வங்கிக்கு கொண்டு செல்லபட்டது.

ஜெர்மனி செல்லும் ‘ஐம்பொன்’ திருவள்ளுவர்

எப்போது வழங்கப்பட்டது

இந்த தங்க கவசம், அதிமுக சார்பில் கடந்த 2014ம் ஆண்டு ரூ. 4 கோடி மதிப்பிலான சுமார் 13.5 கிலோ எடை அளவில் உருவாக்கப்பட்டது. இதனை அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, பசும்பொன் கிராமத்திற்கு நேரில் வந்து வழங்கினார்.

இந்த ஆண்டு

கடந்த அக்டோபர் 28,29,30 ஆகிய நாட்களில் முத்துராமலிங்கர் 57 வது குருபூஜை மற்றும் 112 வது ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக மதுரையில் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டு இருந்த தங்க கவசத்தை, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அக்டோபர் 24 ஆம் தேதி தேவர் நினைவாலயம் பொருப்பாளர் காந்திமீனாளிடம் ஒப்படைத்தார்.

கீழடியில் அருங்காட்சியகம்: சுற்றுலாத் துறையும் தீவிரம்!

தற்போது குருபூஜை விழா நிறைவு பெற்றதையடுத்து, கவசத்தை இன்று துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், பசும்பொன் தேவர் நினைவிடத்தில் இருந்து மதுரையில் உள்ள வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்க கொண்டு செல்லபட்டது.

அடுத்த செய்தி