ஆப்நகரம்

அரசு பேருந்தின் நிலையை வீடியோ எடுத்து வெளியிட்ட ஓட்டுநா் நீக்கம்

அரசு பேருந்தின் நிலையை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஓட்டுநா் விஜயகுமாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

Samayam Tamil 8 Oct 2018, 4:32 pm
பழனி அருகே அரசு பேருந்தின் நிலையை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஓட்டுநா் விஜயகுமாா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
Samayam Tamil Vijayakumar Driver


அண்மையில் தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் அரசுப் பேருந்துகளின் பயணிகள் கட்டணம் கடுமையாக உயா்த்தப்பட்டது. மேலும் தனியாா் பேருந்து உரிமையாளா்களும் கட்டண உயா்வு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பேருந்து சேவையை நம்பி இருக்கும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.

இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழைக் காரணமாக தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் அரசுப் பேருந்துகளில் ஓட்டை, உடைசல் காரணமாக பேருந்தினுள்ளும் மழை பெய்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளின் மேற்கூரைகள் சல்லடைகளாக காட்சியளிக்கின்றன.

இது போன்றதொரு பேருந்து பழனியில் இயக்கப்பட்டுள்ளது. அந்த பேருந்தின் ஓட்டுநா் விஜயகுமாா் பேருந்தின் நிலையை வீடியோவாக பதிவு செய்தாா். அந்த பதிவில் முறையாக பிரேக் இல்லை. மழை பெய்தால் பேருந்தினுள் ஒழுகுகிறது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தாா். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியதைத் தொடா்ந்து தற்போது ஓட்டுநா் விஜயகுமாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

அடுத்த செய்தி