ஆப்நகரம்

அரசுப் பேருந்துகளில் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு

சென்னை :வெகு தூரம் செல்லும் அரசு பேருந்துகளில் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்யும் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மேலும் அரசு பேருந்துகளில் தட்கல் திட்டமும் அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

TNN 30 Aug 2016, 8:41 am

Samayam Tamil government buses booking facility through the mobile app
அரசுப் பேருந்துகளில் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு

சட்டசபையில் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கைகான விவாதம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விவாதங்களுக்கு பதிலளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் :"அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் நீண்டதூரப் பேருந்துகளுக்கு மொபைல் ஆப் வழியாக முன்பதிவு செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

அவசர வேலை காரணமாக உடனடியாகப் பயணம் மேற்கொள்ள வேண்டிய பயணிகளின் வசதிக்காக, அரசுப் பேருந்துகளில் தத்கல் முறையில் பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், நீண்டதூரப் பேருந்துகளில், பேருந்துக்கு நான்கு இருக்கைகள் தத்கல் முறையில் முன்பதிவு செய்யப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி