ஆப்நகரம்

Doctors Boycott: அரசு மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் - நோயாளிகள் அவதி

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் பணி புறக்கணிப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறது.

Samayam Tamil 4 Dec 2018, 2:18 pm
திருச்சி : மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக அனைத்து மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
Samayam Tamil doctors boycott


இதனால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பெரும்பாலான மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக சிகிச்சை பெற வந்த புற நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர்.

அரசு மருத்துவமனையில் இன்று மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் சிகிச்சை பெற வந்த புற நோயாளிகள் வெகுநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து மருத்துவர் சங்க கூட்டமைப்பு சார்பாக 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பயிற்சி மருத்துவர்களும், சில மருத்துவர்கள் மட்டும் பணியாற்றி வருவதால் நோயாளிகள் சிகிச்சை பெற வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏறுபட்டுள்ளதால், பல நோயாளிகள் திரும்ப செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது.
முன்னதாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் தமிழக அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் கைலாஷ். கோபி. ரமணன். உள்ளிட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.

அடுத்த செய்தி